B40, M40, T20 வருமானக் குழுக்களை அரசாங்கம் மறுஆய்வு செய்யும்; நிதியமைச்சு தகவல்

கோலாலம்பூர், டிசம்பர்-4,
மலேசியாவின் தற்போதைய B40, M40, T20 என்ற வருமானக் குழுக்களின் வகைப்படுத்தல் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும்.
ஆனால், வாழ்க்கைச் செலவின் உயர்வைச் சரியாக பிரதிபலிக்க அதில் அரசாங்கம் மறுஆய்வு நடத்துகிறது.
இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் அதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில், தற்போதுள்ளது போல் மொத்த வருமானத்தை விட செலவுக்குப் பிறகு மீதமுள்ள நிகர வருமானத்தின் அடிப்படையில் இந்த வருமானப் பிரிவுகள் நிர்ணயிக்கப்படலாம் என்றார் அவர்.
தற்போதைய வகைப்பாடு பல குடும்பங்களின் நிதிச் சுமையைப் பிரதிபலிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதனை அரசாங்கம் அறியுமென்றும், மாற்றங்கள் இருப்பின் 2026–2030 காலக்கட்டத்தில் 13-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு அமுல்படுத்தப்படும் என, இடைக்கால பொருளாதார அமைச்சருமான அவர் மக்களவையில் கூறினார்.



