
சிலாங்கூர், அக்டோபர்- 17,
மலேசியாவில் முதன்முறையாக தமிழ்மொழி இசை வடிவில் தேசிய அளவில் நடைபெற்ற “BEAT THALAIVAN 2025” எனும் மாபெரும் இசை ஒளிபரப்பாளர் (DJ) போட்டியின் இறுதிச்சுற்று சிலாங்கூரில் மிக விமரிசையாக நிறைவு பெற்றது.
மலேசியாவின் சிறந்த ‘Disk Jockey’ ஐ(DJ) தேர்ந்தெடுக்கும் இந்நிகழ்வு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிலாங்கூர் மாநில முதல்வரின் பொதுத் தொடர்பு சிறப்பு அதிகாரி டாக்டர் குனராஜ் ஜார்ஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டி நிகழ்வில், Pshcomantra, சந்தேஷ், ஆர்வின் ராஜ் போன்ற உள்ளூர் கலைஞர்கள் தங்களின் சிறப்பு படைப்பினைப் படைத்தனர்.
அஜெண்டா சூரியாவின் இணை ஏற்பாட்டாளர் ‘Tuan Jack’ அவரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் டிஜே நாட்டி, டிஜே தாஸ், டிஜே மாஸ்கி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
மலேசிய வரலாற்றிலியே முதன்முறையாக ஏற்பாடு செய்யட்ட BEAT THALAIVAN 2025 மாபெரும் இறுதிச்சுற்றில் சிலாங்கூரைச் சேர்ந்த ஷவினாஷ் காருணாநிதி (DJ நாஷ்) முதல் இடத்தைத் தட்டி சென்றதைத் தொடர்ந்து, கோலாலம்பூரைச் சார்ந்த தினேஷ்குமார் சிவகுமார் (DJ லோ-எக்ஸ்) இரண்டாம் நிலை வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பேராக் மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ் ஹாரிசன் சோசைநாதன் (DJ ஜி.ஜி) மூன்றாம் இடத்திலும் செரி தர்ஷன் (DJ தர்ஷ்), அருள்செல்வன் (DJ சென்னா) மற்றும் தர்வின் (DJ ஸ்டிட்ச்) ஆகியோர் சிறப்புப் பரிசுகளையும் தட்டி சென்றனர்.
மலேசிய தமிழ் இளைஞர்களின் இசைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இந்த “BEAT THALAIVAN 2025” நிகழ்ச்சி, நாட்டின் DJ உலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கியது.