Latestமலேசியா

BMW காரைப் பயன்படுத்தி கேபிள் திருடிய கும்பலுக்கு வலை வீசும் போலீஸ்

கோலாலம்பூர், ஜூன்-9-கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (Taman Tun Dr Ismail) பகுதியில், BMW சொகுசு கார்களைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு கேபிள்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில், டெலிகோம் மலேசியா (TM) நிறுவனத்துக்குச் சொந்தமான கேபிள்களை, பயன்பாட்டு குழியிலிருந்து ஐந்து ஆண்கள் வெளியே இழுத்துக் கொண்டிருந்ததை கண்ணுற்ற நபர் அவர்களை எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று BMW கார்களில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் சந்தேகநபர்களின் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன. மேலும் இந்தச் சம்பவத்தால் சுமார் 20,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக TM நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!