
ஜோகூர் பாரு, ஏப்ரல்-10, ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் பேருந்தில் 2 பயணிகள் சண்டையிட்டுக் கொண்டு வைரலானது தொடர்பில், விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு அந்த வைரல் வீடியோவைக் கண்டதாக, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
BSI எனப்படும் சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் பேருந்தில் ஏறும் போது வரிசையை முந்திச் சென்றதால், இரு ஆடவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் 21 வயது ஆடவரிடமிருந்து புகார் பெறப்பட்டதாக ரவூப் சொன்னார்.
முன்னதாக வைரலான வீடியோவில் பேருந்து நிறுத்துமிடத்தில், மற்ற பயணிகளின் முன்னிலையில் இரு ஆடவர்கள் குத்திக் கொண்டதை காண முடிந்தது.
நல்லவேளையாக அங்கிருந்த பொது மக்களில் சிலர் தலையிட்டு சண்டையைக் கலைத்து விட்டனர்.