
கோலாலம்பூர், அக்டோபர்-1,
BUDI MADANI RON95 (BUDI95) எனும் இலக்கிடப்பட்ட மானியத் திட்டம் அமுலுக்கு வந்த நான்கே நாட்களில், சுமார் 3 மில்லியன் பயனர்களை அது சென்றடைந்துள்ளது.
அதோடு பெட்ரோல் விற்பனையும் RM91 மில்லியனை கடந்துள்ளதாக, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
நேற்று மாலை 6 மணி வரையில், சுமார் 2 மில்லியன் மக்கள் RON95 பெட்ரோலை RM1.99 மானிய விலையில் வாங்கியுள்ளனர்.
எந்தக் குறைகளும் இன்றி திட்டம் சிறப்பாக நடைபெறுவதாகவும், குறைந்த விலையில் எரிபொருள் கிடைப்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாகனங்களை இயக்கி, போக்குவரத்தும் அதிகரித்ததாக அவர் கூறினார்.
சபா மற்றும் சரவாக் பகுதிகளில் படகு உரிமையாளர்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதே சமயம், ஓட்டுநர் உரிமம் 3 காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கும் மேற்போகாதவர்களுக்கு தளர்வு வழங்குவது குறித்தும் ஆராயப்படுகிறது.
BUDI95, செப்டம்பர் 27 முதல் இராணுவ மற்றும் போலீஸ் படையினருக்கும், அதன் பின்னர் STR B40 பெறுநர்களான 5 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கும் முதலில் வழங்கப்பட்டது.
நேற்று முதல், தகுதிப் பெற்ற அனைத்து மலேசியர்களும் மானிய விலையில் எரிபொருளைப் பெறுகின்றனர்.
மொத்தமாக 16 மில்லியன் மலேசியர்கள் மாதத்திற்கு அதிகபட்சம் 300 லிட்டர் வரை, RM1.99 மானிய விலையில் பெட்ரோலைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.