Latestமலேசியா

‘Cleopatra in Space’ கார்ட்டூன் தொடரில் LGBT சர்ச்சை; ஒளிபரப்பை உடனடியாக நிறுத்திய RTM

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-22-மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையமான RTM-மில் ஒளிபரப்பப்பட்டு வந்த ‘Cleopatra in Space’ என்ற கார்ட்டூன் தொடரில், LGBT கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அம்சங்கள் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அத்தொடரின் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

RTM 2-டில் ஏப்ரல் 18, 19-ஆம் தேதிகளில் ஒளிபரப்பான இத்தொடரின் குறிப்பிட்ட காட்சிகளில் தன்பாலின ஈர்ப்பு தொடர்பான உரையாடல்கள் மற்றும் அடையாளங்கள் இருப்பதாக முன்னதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து உள்விசாரணை மேற்கொண்டதில், தொடரின் ஒளிபரப்பைத் தற்காலிகமாக நிறுத்த முடிவுச் செய்யப்பட்டதாக அந்த தேசிய ஒளிபரப்பு நிலையம் கூறியது.

ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் உயர் தரம், பாதுகாப்பு மற்றும் உள்ளூர் கலாச்சாரப் பண்புகளுக்கு உட்பட்டிருப்பதை உறுதிச் செய்யும் கடப்பாட்டையும் அது மறு உறுதிப்படுத்தியது.

RTM, இத்தகைய LGBT கூறுகள் கொண்ட கார்ட்டூன் தொடரை ஒளிபரப்புவது இது இரண்டாவது முறை என, பாஸ் கட்சியின் உலாமா பிரிவுத் தலைவர் Ahmad Yahaya முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

மறைமுகமாக LGBT அம்சங்களைக் கொண்டிருந்ததால், ‘Santiago of the Seas’ என்ற கார்ட்டூனை ஒளிபரப்புவதை RTRM கடந்தாண்டு நிறுத்தியது இங்குக் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!