Dr சாலிஹா முயற்சியில் செந்தூல் தம்புசாமி பிள்ளைத் தமிழ்ப்பள்ளியின் மின்சார அமைப்பு பழுதுபார்ப்பு

செந்தூல், நவம்பர்-13, செந்தூல் தம்புசாமி பிள்ளை தமிழ்ப் பள்ளியின் மின்சார அமைப்பின் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
சேதமடைந்த கம்பிகள் மாற்றப்பட்டு, மின்சார கசிவு தடுப்பு கருவி பொருத்தப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜூன் மாதத்தில் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தஃபா உடனடி ஒதுக்கீடாக 10,000 ரிங்கிட் வழங்கியதன் மூலம் இந்தப் பணி சாத்தியமானதாக, அவரின் அரசியல் செயலாளர் சிவமலர் கணபதி தெரிவித்தார்.
அப்பள்ளிக்கு சிறப்பு வருகை மேற்கொண்டு உரையாற்றிய போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இப்போது, பள்ளியின் மின்சார அமைப்பு மேலும் நிலைத்தன்மையுடன் இயங்கி, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த வசதிகளை அளிப்பதாக, பெரும் கைத்தட்டலுக்கு மத்தியில் சிவமலர் சொன்னார்.
மலேசிய வரலாற்றில் அமைச்சர் ஒருவரது அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்ணான சிவமலருக்கு, பள்ளி நிர்வாகம் அமோக வரவேற்பை அளித்தது.



