
கோலாலம்பூர், நவ 4 –
BUDI 95 முன்முயற்சியின் கீழ் முழுநேர e-hailing ஓட்டுநர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை மாதத்திற்கு 800 லிட்டராக உயர்த்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
திருத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு கிட்டத்தட்ட 5,000 km பயணத்திற்கு ஏற்றது என்றும் இது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று நிதி அமைச்சருமான அன்வார் மக்களவையில் தெரிவித்தார்.
அக்டோபர் 13ஆம் தேதி, முழுநேர e-hailing ஓட்டுநர்களுக்கான BUDI 95 தகுதி உச்சவரம்பை மாதத்திற்கு 600 லிட்டராக உயர்த்துவதாக அரசாங்கம் அறிவித்தது.
இது முன்பு 300 லிட்டரிலிருந்து, குறைந்தது 58,000 e-hailing ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும்.
முழுநேர e-hailing ஓட்டுநர்களின் முறையீடுகள் மற்றும் e-hailing சேவை வழங்குநர்கள் சமர்ப்பித்த எரிபொருள் பயன்பாட்டுத் தரவுகளை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, முழுநேர e-hailing ஓட்டுநர்களுக்கான ஒதுக்கீட்டு அதிகரிப்பை அரசாங்கம் அறிவிக்கும் என்று கருவூலத் தலைமைச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் ( Johan Mahmood Merican ) நேற்றிரவு தெரிவித்தார்.
பொது மக்களுக்கு, சராசரி பயன்பாடு 98 லிட்டர் மட்டுமே என்பதால், 300 லிட்டர் மாதாந்திர ஒதுக்கீடு போதுமானது என்றும், இது ஒதுக்கப்பட்ட தொகையில் வெறும் 33 விழுக்காடு மட்டுமே இருப்பதாக அன்வார் கூறினார்.



