
பினாங்கு மார்ச் -9- 30க்கும் மேற்பட்ட வர்த்தக பயிற்சி பட்டறைகளை வெற்றிகரமாக நடத்தி இந்திய சமூகத்துக்கு வியாபார ரீதியில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள Enricos நிறுவனம் மீண்டும் இந்த 2026 ஆம் ஆண்டில் சுமார் 150 மாணவர்களுடன் 3.0 நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினர்.
CEO திரு சுந்தரம் மற்றும் திரு வீ ராஜேந்திரன் வேலாயுதம் நாயர் மேற்பார்வையில் 37 ஆண்டுகள் வெற்றிகரமாக பல விதமான சமையல் பொருட்களுடன் பஞ்சா நிறுவனத்தின் பூஜை பொருட்களையும் இணைத்து சந்தையில் Enricos நிறுவனத்தினர் விநியோகித்து வருகின்றனர்.
முக்கியமாக இந்த பயிற்சி வழி மாணவர்களுக்கும் வர்த்தகம் செய்யவும் ஊக்குவிப்பு கொடுத்து முதல் கட்டமாக சிறு தொகை முதலீடாக 100 ரிங்கிட்டும் கொடுத்து 21 நாட்களில் இந்த பணத்தை கொண்டு வருமானம் தேடி ஆதாயத்தை எடுத்துக் கொண்டு enricos வழங்கிய முதலீட்டு தொகையை திருப்பி கொடுக்கும் பயிற்சி பட்டறையை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு சிறப்பு வருகை புரிந்ததோடு ஏற்பாட்டுக் குழுவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்ததோடு , மாணவர்கள் கல்வியுடன் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு சொந்த வருமானத்தை ஈட்டுவதற்கான வழியை Enricos நிறுவனம் ஏற்படுத்தித் தந்தது வரவேற்கக்கூடிய நடவடிக்கை என வருணித்தார்.
விவேகம் மற்றும் விடா முயற்சியுடன் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து இந்திய சமூகம் கடைபிடித்து பயணம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று தனது 14 வயது முதல் கடந்து வந்த வாழ்க்கை பாதையையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இதனிடையே ராஜேந்திரன் தனதுரையில் , Enricos நிறுவனம் 35 ஆண்டுகள் கடந்து வருவதற்கு கடுமையான உழைப்பு செலவழித்து இன்று உயர்ந்துள்ளது என்று தெளிவுபடுத்தினார். இரண்டு ஆண்டுகள் நமது கலாச்சார விழாவான பொங்கல் நிகழ்வை கெடாவிலும் பினாங்கு தீவிலும் நடத்தி சமூக ஒற்றுமையை மேம்படுத்தி வருவதாகவும் ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.



