கோலாலம்பூர், நவ 4 – FashionValet Sdn Bhd , நிதி அமைச்சு மற்றும் இரண்டு அரசு சார்பு நிறுவனங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC இன்று அதிரடி சோதனை நடத்தியது . Khazanah Nasional மற்றும் Permodalan Nasional Bhd (PNB) சம்பந்தப்பட்ட 43.9 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு இழப்பு தொடர்பில் MACC யின் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சு, Khazanah Nasional மற்றும் PNB ஆகியவற்றை ஒரே நேரத்தில் குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கையின்போது FashionValet தோற்றுவிப்பாளர்கள் டத்தின் Vivy Yusof மற்றும் அவரது கணவர் Datuk Fadzaruddin Shah Anuar ஆகியோரும் நிறுவனத்தின் வளாகத்தில் விசாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. MACC இன் TikTok பக்கத்தில் பகிரப்பட்ட காட்சிகள், அதிகாரிகள் தலைமையகத்திற்குள் நுழைந்து அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட இரு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதை MACC யின் Tik Tok பக்கத்தில் பகிரப்பட்ட காட்சி காட்டியது.