ஷா ஆலாம், டிசம்பர்-13, FLYSiswa திட்டத்தின் கீழ் விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வழங்கி வந்த மானிய விகிதத்தை, ஜனவரி 1 முதல் 300 ரிங்கிட்டிலிருந்து 400 ரிங்கிட்டுக்கு உயர்த்த அரசாங்கம் இணங்கியுள்ளது.
சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள UiTM பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான மடானி போக்குவரத்து விழாவில் உரையாற்றிய போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை அறிவித்தார்.
அந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாம்ரி அப்துல் காடிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மானிய உயர்வானது, பொது பல்கலைக்கழகங்கள், தொழில்பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், மெட்ரிகுலேஷன் மையங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 74,000 மாணவர்களுக்கு பயன் தரும்.
இது மொத்தம் 24 மில்லியன் ரிங்கிட் செலவை உட்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் நலன்களில் மடானி அரசாங்கம் எப்போதும் அக்கறைக் கொண்டுள்ளதாக பிரதமர் சொன்னார்.