Forex மோசடி: RM261,420 இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி

Prai டோல் சாவடியில் மருத்துவரை கார் மோதி காயப்படுத்திய வழக்கு: உணவு வியாபாரி மீது குற்றச்சாட்டு
புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி 7 – Prai டோல் சாவடியில் ஏற்பட்ட தகராறில், காரை பின்செலுத்தி ஒரு மருத்துவரை மோதி காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட உணவு வியாபாரி ஒருவர், இன்று இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது அந்த 32 வயதான சந்தேக ஆடவன் நீதிபதியின் முன்னிலையில் குற்றத்தை மறுத்துள்ளான்.
கடந்த டிசம்பர் 28 ஆம் தேதியன்று Prai டோல் சாவடியில் வேண்டுமென்றே மருத்துவர் ஒருவரின் காரை மோதி அவரை காயப்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட இந்த வழக்கானது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, அபராதம், மற்றும் பிரம்படி விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சம்பவம், RFID கருவி செயலிழந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர், தன் மனைவியின் கார் டோல் பாதையிலிருந்து வெளியேற முடியாத நிலையில், பின்னால் இருந்த காரை பின்செலுத்துமாறு கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின், குற்றம் சாட்டப்பட்டவர் காரை பின்செலுத்தி திடீரென முன்னோக்கி ஓட்டி, மருத்துவரை மோதி காயப்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் வாகன டாஷ்கேம் காட்சிகளின் அடிப்படையில், போலீசார் அடுத்த நாள் குற்றம் சாட்டப்பட்ட நபரையும் அவரது மனைவியையும் கைது செய்தனர். இந்நிலையில் சந்தேக நபருக்கு 5000 ரிங்கிட் ஜாமீன் விதிக்கப்பட்டு, மார்ச் 3 ஆம் தேதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



