Latestமலேசியா

‘Gay-Friendly’ விளம்பரம்: மலாக்கா ஹோட்டல் மீது JAIM விசாரணை

மலாக்கா, ஜனவரி-13 – மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையான JAIM, ‘gay-friendly’ அல்லது ‘ஓரினச் சேர்க்கைத் தோழமைக்’ என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு ஹோட்டலை விசாரிக்கிறது.

சமூக ஊடகங்களில் அந்த ஹோட்டலின் விளம்பரப் படங்கள் வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

JAIM தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும், கல்வி மற்றும் இஸ்லாமிய சமய விவகாரஙளுக்கான மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Rahmad Mariman கூறினார்.

இவ்விவகாரத்தை சுயேட்சை சமய சொற்பொழிவாளர் Firdaus Wong முன்னதாக அம்பலப்படுத்தியிருந்தார்.

கலாச்சாரம் மற்றும் மத உணர்வுகளை கவனத்தில் கொள்ளாமல், வணிக நிறுவனங்கள், சந்தைப் படுத்தல் யுக்தியாக எதற்கெடுத்தாலும் ‘friendly’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கமாகி விட்டதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!