Latestமலேசியா

‘Geng Boy Arau’ கும்பல் ஒழிப்பு; வீடு புகுந்து, கார் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

பெர்லிஸ், பிப்ரவரி 6 – கடந்த ஒரு மாதமாக பெர்லிஸ் ஆராவ் பகுதியில் வீடுகளில் புகுந்து திருட்டு மற்றும் கார் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ‘Geng Boy Arau’ என்ற குற்றக் கும்பலை போலீசார் வெற்றிகரமாக ஒழித்துள்ளனர். இந்த நடவடிக்கையில், ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பெர்லிஸ் மாநில காவல் தலைமையக குற்றப் புலனாய்வு பிரிவுடன் இணைந்து Op Lejang/Pintu சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆராவ் மாவட்ட காவல்துறை தலைவர் Superintendan Ahmad Mohsin Md Rodi கூறினார்.

இந்த நடவடிக்கையின் போது, ஜனவரியில் திருடப்பட்ட Perodua Kelisa கார் சம்பவம் தொடர்பாக 28 வயது ஆடவன் அலோர் ஸ்டாரில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த 47 வயதுடைய BOY என்கின்ற ஆடவன் அடையாளம் காணப்பட்டான்.

போலீசார் அவனைக் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் காரில் தப்பிச் செல்ல முனைந்துள்ளான். இதையடுத்து, போலீசார் காரின் முன்சக்கரங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். துரத்தல் நடவடிக்கையின் முடிவில், 27 வயது மற்றொரு ஆடவனும் கைது செய்யப்பட்டுள்ளான்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கும்பலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேகநபரின் மனைவி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது வீட்டில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் தொலைக்காட்சிகள் மற்றும் மின் கருவிகள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தப்பியோடிய கும்பல் தலைவர் ‘போய்’ நேற்று நண்பகல் தனது வீட்டின் அருகே கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!