Latestமலேசியா

வெளிநாட்டுத் திருமணங்கள் மலேசியாவில் பதிவுச் செய்யப்படாவிட்டால் குழந்தைகள் தந்தையின் பெயரை பயன்படுத்த முடியாது; JPN அதிரடி

கோத்தா பாரு, பிப்ரவரி-4-தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்ட முஸ்லீம் தம்பதிகள், அந்த திருமணத்தை மலேசியாவில் பதிவு செய்யாத பட்சத்தில், அவர்களின் குழந்தைகள், தந்தையின் பெயரை அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்த முடியாது.

தேசிய பதிவிலாகாவான JPN அதனை அறிவித்துள்ளது.

திருமணம் வெளிநாட்டில் நடந்திருந்தாலும், அது மலேசியாவில் முறையாக பதிவுச் செய்யப்பட வேண்டும்.

இல்லையெனில், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள ஆவணங்களில் தந்தையின் பெயர் சேர்க்கப்படாது என, JPN தலைமை இயக்குநர் டத்தோ Badrul Hisham Alias விளக்கினார்.

பின்னர், திருமணம் இந்நாட்டில் பதிவுச் செய்யப்பட்ட பிறகு வேண்டுமானால், தந்தையின் பெயரைப் பயன்படுத்த அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

இந்த நடைமுறை, அடையாளப் பதிவு துல்லியமாக இருப்பதற்கும், எதிர்கால சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்கும் அமுல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

பெற்றோர் திருமணப் பதிவு தொடர்பான தகவல்களுக்கு, அருகிலுள்ள தேசிய பதிவிலாகா அலுவலங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!