
ஜோகூர், ஜூன் 25 – ஜோகூர் தாமான் ஆயர் பீரூ (Taman Air Biru) பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் எரிவாயு குழாய் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் தீக்காயமடைந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், 30 வயதுடைய நபரின் கைகளில் 50 விழுக்காடும் கால்களில் 20 விழுக்காடும் தீக்காயம் ஏற்பட்டதாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அவரது 28 வயது மனைவிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன், நான்கு வயது மகளின் கால்விரலிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அம்மூவரும் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அக்குடும்பத்தினர் சம்பவத்திற்கு முன்பே எரிவாயு கசிவு நாற்றத்தை உணர்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் வீட்டின் சுமார் 50 விழுக்காடு பகுதி சேதமடைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.



