
சுபாங், ஆகஸ்ட் 10 – பிகேஆர் கட்சியின் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தாம் கடந்த புதன்கிழமை மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துலை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
பதவி காலியிடத்தை அறிவிப்பதற்கான நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு மூன்று வேலை நாட்கள் அவகாசம் வழங்கும் வகையில் ராஜினாமா செய்யும் நேரம் திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வோங் சென், புதன்கிழமை காலை 11 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் 2013 முதல் 2018 வரை கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2018 முதல் இன்று வரை சுபாங் எம்.பி.யாகவும் இருந்தார்.
இந்நிலையில் சிறப்பு தொகுதி நிதியை நிர்வகிக்கும் MyKhas இணையதளத்தை அணுகத் தடை விதிக்கப்பட்ட மூன்று பிகேஆர் எம்.பி.க்களில் வோங் சென்னும் ஒருவர்.



