Latestமலேசியா

மலேசியத் தூய்மை தினம் 2026 — நாடு முழுவதும் 469 இடங்களில் 2 லட்சம் பேர் பங்கேற்க இலக்கு

கோம்பாக், செப்டம்பர்-26 – ​நாடு முழுவதும் 469 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற ‘மலேசியத் தூய்மை தினம் 2026’ திட்டத்தின் கீழ், சுமார் 200,000 மக்களைப் பங்கேற்கச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT ஏற்பாட்டில் இன்று இத்திட்டத்தின் தேசிய அளவிலான தொடக்க விழா, சிலாங்கூர், தாமான் ஸ்ரீ கோம்பாக் பொதுச் சந்தையில் நடைப்பெற்றது.

​அமைச்சர் ஙா கோர் மிங் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

​தூய்மையைப் பேணுதல், மறுசுழற்சியை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்பான கழிவு மேலாண்மையை மக்களின் அன்றாட வாழ்க்கை முறையாக மாற்றுவதே இந்த மாபெரும் இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

​இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இத்தூய்மைப் பணியில் தீவிரமாக இணைக்கப்பட்டுள்ளனர்.

​200,000 மக்களின் ஒருங்கிணைந்த பங்கேற்பு மற்றும் ஒரே நாளில் 28 ஆயிரம் கிலோ கிராம் மறுசுழற்சிப் பொருட்களைச் சேகரிப்பதன் வாயிலாக, இரண்டு புதிய மலேசியச் சாதனைகளைப் படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

​சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பராமரிப்பது அரசாங்கத்தின் பணி மட்டுமல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் கூட்டுப் பொறுப்பு என்பதையும் அமைச்சர் ஙா கோர் மிங் தமதுரையில் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!