Latestமலேசியா

பேராக் சுல்தானின் பிறந்தநாளை முன்னிட்டு, பெர்னாமா தலைமை ஆசிரியர் அருள் ராஜூவுக்கு ‘டத்தோ’ பட்டம்

கோலாலம்பூர், நவ16-மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைமை ஆசிரியர் அருள் ராஜு துரைராஜுவுக்கு பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு Darjah Dato Paduka Mahkota Perak (DPMP) விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுகள் மற்றும் பதக்கங்களைப் பெற்ற 218 பேரில் அவரும் ஒருவராவார். அதன் மூலம் அவருக்கு ‘டத்தோ’ பட்டம் கிடைத்துள்ளது.

அருள் ராஜு 1991-ஆம் ஆண்டு பெர்னாமாவில் பயிற்சி செய்தியாளராகப் பணியைத் தொடங்கி, பின்னர் விளையாட்டுச் செய்தியாளராகப் பணியாற்றினார். 2001-ஆம் ஆண்டு பேராக் பெர்னாமா பணியகத் தலைவராகவும், 2005-ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள அந்த தேசிய செய்தி நிறுவனத்தின் நிருபராக தனது பணியைத் தொடர்ந்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டில் பெர்னாமா செய்தி சேவையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே அவர் ஆடியோ விஷுவல் சேவையின் (பெர்னாமா டிவி) பணிப்பிரிவு ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

2022-ஆம் ஆண்டு தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 2023-ஆம் ஆண்டு பொருளாதாரச் செய்திப் பிரிவின் துணைத் தலைமை ஆசிரியராகவும், பின்னர் செய்திச் சேவையின் துணைத் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். தற்போது பெர்னாமாவின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார். இவர் மலாயா பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

பேராக் மாநில விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா, கோலா கங்சாரில் உள்ள Istana Iskandariahவின் Balairong Seriயில் நேற்று நடைபெற்ற நிலையில். அடுத்த கட்டமாக நவம்பர் 21 ஆகிய தேதி நடைபெறவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!