Latestமலேசியா

GISBHவின் தலைமை செயல்முறை நிர்வாகி, அவரது மனைவி மற்றும் 20 பேர் மீது குற்றச்சாட்டு

செலயாங், அக் 23 – குளோபல் இக்வான் (GISBH) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ நசிருடின் முகமட். அலி, ( Nasiruddin Mohd Ali ) அவரது மனைவி டத்தின் அசுரா முகமட் யூசோப் ( Azura Md Yusof ) மற்றும் 20 நபர்கள் மீது திட்டமிடப்பட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக செலயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி லைலாதுல் சுரைடா ஹருன் (Lailatul Zuraidah Harron @ Harun) முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் அவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்டதாக இருப்பதால் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

2020ஆம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம்தேதிவரை ரவாங்கில், Jalan Desa Bandar Country Homes சில் திட்டமிட்ட குற்றச் செயல் குழுவின் உறுப்பினர்களாக இருந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 5 ஆண்டு சிறை மற்றும் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் தண்டனைச் சட்டம் 130 ஆவது விதி (1) இன் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு டிசம்பர் 23 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் .

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் Al Arqam இயக்கத்தை தோற்றுவித்த அதன் முன்னாள் தலைவர் Ashaari Muhamad ட்டின் மகன் முகமட் அடிப்பும் (Mohamad Adib) அடங்குவார்.

சட்டத்துறை தலைவர் துறையின் கவனத்திற்கு விசாரணை அறிக்கை கொண்டு வரப்பட்ட பின் அவர்கள் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் உசேய்ன் ( Razarudin Husain ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!