Latestமலேசியா

HASiL-இன் அதிரடி நடவடிக்கை: RM3.5 பில்லியன் அறிவிக்கப்படாத வருமானம் அம்பலம்

புத்ராஜெயா, ஏப்ரல்-27-உள்நாட்டு வருவாய் வாரியமான HASiL, RM3.5 பில்லியன் அறிவிக்கப்படாத வருமானத்தைக் கண்டறிந்துள்ளது.

இந்த மிகப்பெரிய மற்றும் அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு, மேம்பட்ட e-Invoicing தரவுகளின் ஆய்வின் மூலம் சாத்தியமானது.

2024 ஆகஸ்டில் e-Invoicing அமுலாக்கம் தொடங்கியது முதல், கிட்டத்தட்ட 226,000 வரி செலுத்துவோர் அதில் இணைந்துள்ளனர்.

இதன் மூலம், 1.3 பில்லியனுக்கும் அதிகமான e-Invoice சீட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன; என்றாலும், அனைவரும் அதனை பின்பற்றி விடவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

அமுலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 38,906 வரி செலுத்துவோர் முன்வந்து படிவங்களைச் சமர்ப்பித்தனர்; அவர்கள் RM760.7 மில்லியன் வரி செலுத்த வேண்டியிருந்தது தெரியவந்துள்ளது.

வருமான வரி படிவங்களை இன்னும் சமர்ப்பிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று HASiL தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், கடந்த மாதம் நாடு தழுவிய அளவில் ஒரே நேரத்தில் அமுலாக்க நடவடிக்கை நடத்தப்பட்டதில், e-Invoicing-ஸை இன்னும் நடைமுறைப்படுத்தாத 108 வரி செலுத்துவோர் அடையாளம் காணப்பட்டனர்.

இதனிடையே, PMKS எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மாதாந்திர அடிப்படையில் ஒருங்கிணைந்த e-Invoicing வழங்க அனுமதிக்கும் வகையில், அரசாங்கம் சிறு தளர்வு வழங்கியுள்ளது.

அதாவது, கடந்த ஜனவரியில் தொடங்கிய இந்த அமுலாக்கக் காலம் 12 மாதங்களுக்கு பதிலாக 24 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆக, 2027 டிசம்பர் 31 வரை ஒருங்கிணைந்த e-Invoice விதிகளை வணிகங்கள் பின்பற்றினால், இணக்கமின்மைக்காக எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று HASiL உறுதிப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!