
கோலாலம்பூர், ஜூலை 27- ‘மிட் வேலி’ (Mid Valley) ‘komuter’ அதாவது ரயில் நிலையத்தில் மின்கம்பியில் துணி ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட தீ, நிலையத்தின் அலுமினிய கூரையின் ஒரு பகுதியில் சிறிய தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாலை அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றபோது தீ தானாகவே அணைந்திருந்தது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் இல்லை. மேலும், கட்டிடத்தின் அமைப்புக்கும் சேதம் ஏற்படவில்லை என்று கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளன.



