Latestமலேசியா

AKPS பெண் அதிகாரி கொலை: மனைவியைக் கொலை செய்ததாக முன்னாள் கைதி மீது குற்றச்சாட்டு

சிரம்பான், அக்-26-AKPS எனும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவன அதிகாரியான தனது மனைவியைக் கொலை செய்ததாக 37 வயது முன்னாள் கைதி ஒருவர் மீது, இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதும் Mohd Khairudin Safi’ai எனும் அந்நபர் அதனைப் புரிந்து கொள்வதாக தலையசைத்தார்.

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி மாலை சுமார் 7 மணியளவில், KLIA அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் தனது 35 வயது மனைவி Norhazwani Ibrahimமைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அக்குற்றம், குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

அவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதால், நீதிமன்றத்தில் குற்ற ஒப்புதல் பதிவு ஏதும் செய்யப்படவில்லை. துணை அரசு வழக்கறிஞர் பிரேதப் பரிசோதனை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான தேதியைக் கோரியதை அடுத்து, அடுத்த விசாரணை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், கொலைக் குற்றச்சாட்டு பிணை வழங்க முடியாத குற்றமாக இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!