Latestமலேசியா

வெயிலில் 3 கி.மீ. நீண்ட வரிசை! ஷேட் சாடிக் – பெல்லா அஸ்தில்லா வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் கூட்டம்!

கோலாலம்பூர், அக்டோபர் 26 – ஜோகூர் மாநிலம், மூவார் பகுதியில் நடைபெற்ற ஷேட் சாடிக் (Syed Saddiq) – பெல்லா அஸ்தில்லா (Bella Astillah) திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, விருந்தினர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்குக் கடும் வெயிலில் வரிசையில் காத்திருந்தனர்.

பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்காக, சிலர் காலை 9 மணிக்கே வரத் தொடங்கினர். சுமார் 10,000 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமானோர் திரண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், விருந்தினர்கள் குறைந்த கட்டணத்தில் நிகழ்ச்சிக்கு வருவதற்கு வசதியாக, கிராப் (Grab) வாகனச் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக BASS25 என்ற தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

உணவு, பானங்கள் மற்றும் புகைப்படச் சட்டகம் உள்ளிட்ட நினைவுப் பரிசுகளுக்காக, 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அனுசரணைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!