
கோலாலம்பூர்-அக்டோபர் 26 – Waze செயலிக்கு மாற்றாக உள்ளூர் வழிகாட்டிச் செயலியை உருவாக்குவதற்கு, அரசு திறந்த ஒப்பந்தப்புள்ளி முறையைப் பின்பற்ற வேண்டும் என்று டிஏபி ஆலோசகர் லிம் குவான் எங் (Lim Guan Eng) வலியுறுத்தியுள்ளார்.
TuJu செயலி பயனர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதைத் தொடர்ந்து, அதை உருவாக்கிய Prosignal Consortium Sdn Bhd நிறுவனத்திற்குத் திட்டம் வழங்கப்பட்ட விதம் குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
உள்ளூர் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் போட்டியிட்டு சிறந்த செயலியை உருவாக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், செயலி முழுமையாகச் சோதிக்கப்பட்டு நம்பகத்தன்மை உறுதிசெய்யப்பட்ட பின்னரே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக Cradle Fund மற்றும் MDEC போன்ற அமைப்புகளின் மானியங்கள், நிதியுதவிகளைப் பயன்படுத்தி உள்ளூர் நிறுவனங்களின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதரவளிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, Waze செயலியைப் பயன்படுத்துவதால் தகவல் மற்றும் பயனர்களின் பயணத் தரவுகளின் பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார். TuJu செயலியில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பயனர்களிடம் மன்னிப்பும் கோரியிருந்தார்.



