
கோலாலம்பூர், ஜனவரி-13-கோலாலம்பூர், புக்கிட் டாமான்சாராவில் உள்ள HELP தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் மரணமடைந்தவர், தொழிற்பயிற்சி மேற்கொண்டு வந்த 24 வயது UTAR பல்கலைக்கழக மாணவர் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
Soo Yu Juan, UTAR பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் மாணவர் ஆவார்.
சம்பவ இடத்தில் குளிரூட்டி பராமரிப்பு பணிகளைச் செய்து வந்த ஒரு நிறுவனத்தில் அவர் தொழிற்பயிற்சி செய்து வந்தார்.
இந்த வியாழக்கிழமையுடன் அவரது தொழில்பயிற்சி முடிவடைந்திருக்க வேண்டும்.
எனினும் துரதிஷ்டவசமாக, நேற்று நான்காவது மாடியில் உள்ள உணவகத்தின் அருகே இருந்த குளிரூட்டி திடீரென வெடித்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் குத்தகைத் தொழிலாளர்கள் உட்பட இதர 9 பேர் அதில் காயமடைந்தனர்.
அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
UTAR நிர்வாகம், இறந்த மாணவரின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
வெடிப்புக்கான காரணம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், HELP பல்கலைக்கழகத் தரப்பும் உயர் கல்வி அமைச்சும் campus வளாகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளை தொடங்கியுள்ளன.



