Latestமலேசியா

Hibrid எனப்படும் கலப்பு வகுப்புகள் அடுத்த ஆண்டு 400 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் – கல்வி அமைச்சு

கோலாலம்பூர், டிச 11 – Hibrid எனப்படும் கலப்பு வகுப்புகள் அடுத்த ஆண்டு முதல் 110 பள்ளிகளில் இருந்து 400 பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் 340 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு சம்பந்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை துணையமைச்சர் வொங் கா வோ ( Wong Kah Woh ) தெரிவித்தார்.

கற்றல் அம்சத்தில் யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதற்காக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளிலும் Hibrid வகுப்புகள் விரிவுபடுத்துவதற்கு அடையாளம் காணப்பட்டதாக Wong Kah Woh கூறினார்.

இந்த விவகாரத்தில் ஆசிரியர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களை கல்வி அமைச்சு பெற்றது. கூடுதல் வகுப்புகளுக்கான கோரிக்கைகள் மற்றும் மேம்பாடுகளுக்கான பரிந்துரைகள், கூடுதல் வழக்கமான பயன்பாட்டு பயிற்சி மற்றும் வகுப்பறையில் உள்ள உபகரணங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் இவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

வள மையங்கள், நிர்வாக அறைகள் மற்றும் கலப்பு வகுப்பறைகள் உட்பட இணைய வசதிகளுடன் 15 இடங்களில் இது சீரமைக்கப்படும். இந்த திட்டத்தில் மின்சார
இணைப்புக்கு 20 மில்லியன் ரிங்கிட் , சாதனங்களுக்காக 153 மில்லியன் ரிங்கிட் மற்றும் இணைய வசதிக்காக 167 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் Wong Kah Woh தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 110 பள்ளிகளின் Hibrid வகுப்பு முன்னோடி திட்டமானது ஒரே நேரத்தில் நேருக்கு நேர் , டிஜிட்டல் கற்பித்தல் மற்றும் கற்றலை (PdP) செயல்படுத்த 550 வகுப்புகளை உள்ளடக்கியது என்பதோடு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களை ஈடுபடுத்தி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி தரத்தை மேம்படுத்த முடியும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!