
பாட்னா, பீகார், ஜனவரி 8 – பாதுகாப்பு காரணங்களால், பீகாரிலுள்ள உள்ள நகைக் கடைகளில், முகம் முழுவதுமாக அல்லது பகுதியளவில் மூடியவர்களுக்கு இனி அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக Hijap, burqa, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து வரும் அனைவருக்கும் இந்த விதி நிச்சயமாக பொருந்தும்.
அகில இந்திய நகை வியாபாரிகள் மற்றும் தங்க கூட்டமைப்பின் வழிகாட்டுதலின் பேரில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, நகைக் கடைகளில் அதிகரித்து வரும் திருட்டு மற்றும் கொள்ளைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி 8 முதல் இந்த விதிமுறை மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது. பல கடைகளில் “முகம் மூடியவர்களுக்கு அனுமதி இல்லை” என்ற அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன.
நகை வியாபாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், இது மதம் அல்லது சமூகத்தை குறிவைக்கும் நடவடிக்கை அல்ல என்றும் முழுக்க முழுக்க பாதுகாப்பு சார்ந்த முடிவே என விளக்கமளித்துள்ளனர். முகத்தை வெளிப்படுத்திய பின்னரே கடைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.



