Latestஉலகம்

Hormuz நீரிணையில் புதைத்த கண்ணிவெடிகள் எங்கே? வழித்தடத்தை கண்டறிய முடியாமல் ஈரான் திணறல்

தெஹ்ரான், ஏப்ரல்-12-உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான Hormuz நீரிணையை முடக்க ஈரான் மேற்கொண்ட முயற்சி தற்போது ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஈரானிய இராணுவம் நிலப்பரப்பு தெரியாமல் கண்மூடித்தனமாக கண்ணிவெடிகளை (Mines) புதைத்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சிறு படகுகள் மூலம் முறையான வரைபடங்கள் இன்றி இந்த கண்ணிவெடிகள் வைக்கப்பட்டதால், அவை தற்போது எங்கே இருக்கின்றன என்பது ஈரானுக்கே தெரியவில்லை என, அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி New York Times செய்தி வெளியிட்டுள்ளது.

கண்ணிவெடிகள் நீரோட்டத்தினால் இடம் பெயர்ந்து சென்றது போன்ற காரணங்களால், கடல் போக்குவரத்தை விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது கடினம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போதிய கண்ணிவெடி அகற்றும் கருவிகள் அந்தப் பகுதியில் இல்லாததால், இந்த சிக்கல் நீடிக்கும் என அஞ்சப்படுகிறது.

​உலகின் 20 விழுக்காடு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த வழித்தடத்தில், வழக்கமான முறையில் தற்போது கப்பல்கள் செல்வது முற்றிலும் முடங்கியுள்ளது.

பாதுகாப்பான பாதையில் செல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு கப்பலுக்கும் சுமார் 2 மில்லியன் டாலர் வரை ஈரான் வரி வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை “உலகளாவிய மிரட்டல்” என்று சாடியுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமெனில் இந்த வழித்தடம் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!