Latestமலேசியா

IJM நெடுஞ்சாலை ஓட்டத்திற்காக NPE, Besraya நெடுஞ்சாலைகள் தற்காலிக மூடல்

கோலாலாம்பூர், ஜூலை-30- IJM Duo Highway Challenge Run 2025 ஓட்டப்போட்டிக்காக, NPE மற்றும் Besraya நெடுஞ்சாலைகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் காலை 11 மணி வரை மூடப்படும்.

NPE நெடுஞ்சாலையில், சுபாங் ஜெயா Kewajipan Roundabout-டின் 1.8 கிலோ மீட்டரிலிருந்து பங்சாரின் 11 வரையிலான பகுதியிலும், Kuchai Lama Entrepreneur Park-கிலிருந்து Pantai Dalam டோல் சாவடி வரையிலான பகுதியிலும் இரு வழிப் பாதைகளையும் இது பாதிக்கும்.

அதே சமயம், Besraya மூடல், Kuchai Lama Interchange தொடங்கி Jalan Pandan Satu-வின் 21.9-ஆவது கிலோ மீட்டர் வரை, MRR2 சாலையின் இரு வழிப் பாதைகளையும் பாதிக்கும்.

எனவே, வாகனமோட்டிகள், சுமூகமானப் பயணத்திற்கு மாற்றுச் சாலைகளைப் பயன்படுத்துமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாற்றுப் பாதைகள் குறித்த தகவல்களை NPE, Besraya சமூக ஊடகப் பக்கங்களில் காணலாம்.

இந்தத் தற்காலிக மூடலுக்கு பொதுப் பணி அமைச்சும் , நெடுஞ்சாலை அதிகாரத் தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாக, அவ்விரு நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு நிறுவனம் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!