கோலாலம்பூர், அக் 16 -முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தேசிய இருதய சிகிச்சை மையமான ஐ.ஜே.என்னில் (I.J.N) அனுமதிக்கப்பட்டதால், துணைப்பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கு அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்றினால் மகாதீர் நேற்று மாலையில் ஐ.ஜே.என்னில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் மியோர் நோர் ஹைடிர் சுஹாய்மி ( Mior Nor Haidir Suhaimi ) நீதித்துறை ஆணையர் Gan Techiong கிடம் தெரிவித்திருக்கிறார். அக்டோபர் 25ஆம்தேதிவரை மகாதீர் மருத்துவ விடுப்பில் இருந்துவருவார் என கான் சுட்டிக்காட்டினார். 99 வயதான மகாதீர் சுவாச பாதை நோய்த்தொற்று காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என IJN இருதயநோய் நிபுணர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மருத்துவ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல், மகாதீர் சாட்சியம் அளித்து வந்தார். அவரை ஸாஹிட்டின் வழக்கறிஞர் ஷாருல் ஃபஸ்லி கமருஸ்மான்( Sharul Fazli Kamaruzman ) குறுக்கு விசாரணை செய்தார். இன்றும் நாளையும் நடைபெறவிருந்த விசாரணையை நீதிபதி கான் ரத்து செய்தார். வழக்கு விசாரணை அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தொடரும். அதோடு இந்த வழக்கில் ஸாஹிட் சாட்சியமளிக்க டிசம்பரில் மூன்று நாட்களை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. மகாதீரின் மகன் முக்ரிஸ் வாதியின் இரண்டாவது சாட்சியாக இருப்பார் என்று மியோர் நோர் கூறினார்.