Jejak Cemerlang 2025 திட்டத்தை கிராமப்புற பள்ளிகளுக்கு விரிவுபடுத்திய பெர்னாஸ்

லஞ்சாங், அக்டோபர்-31,
பெர்னாஸ் எனப்படும் Permodalan Nasional Berhad நிறுவனம், ‘Jejak Cemerlang 2025’ CSR திட்டத்தை முதன் முறையாக கிராமப்புற பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது.
பஹாங், தெமர்லோவில் உள்ள SMK Datuk Bahaman, SMK Lanchang, SMK Bukit Damar ஆகிய 3 இடைநிலைப் பள்ளிகளே சம்பந்தப்பட்ட பள்ளிகளாகும்.
மாணவர்கள், குறிப்பாக SPM தேர்வெழுதுவோருக்கு தன்னம்பிக்கையூட்டி சிறந்த முறையில் அவர்களைத் தயார்படுத்தும் தொடர் முயற்சி இதுவாகுமென, பெர்னாஸ் தலைமை செயலதிகாரி டத்தோ நோர் அசாம் மாட் தாய்ப் தெரிவித்தார்.
“அரசாங்கப் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு தேர்வு நுணுக்கங்கள், நேர நிர்வாகம், மற்றும் ஊக்கத்தை வழங்கும் நோக்குடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என SMK Datuk Bahaman இடைநிலைப் பள்ளியில் இந்த Jejak Cemerlang திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் சொன்னார்.
நகரப்புற மாணவர்களைப் போலவே, கிராமப்புற மாணவர்களும் தரமான வழிகாட்டலும் தேர்வுக்கான பயிற்சியும் பெறும் வகையில் இம்முயற்சியை பெர்னாஸ் விரிவாக்குகிறது.
இவ்வேளையில், வசதி குறைந்த மாணவர்களும், புதிய பள்ளி தவணைக்கு சிறந்த முறையில் தயாராக உதவும் வகையில், ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ மற்றும் இலவச மூக்குக் கண்ணாடி திட்டம் போன்ற இதர CSR அங்கங்களும் அந்நிகழ்வில் இடம்பெற்றன.



