Latestஉலகம்

Johnson & Johnson புட்டாமாவால் வந்த புற்றுநோய்? ; அமெரிக்க ஆடவருக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு

நியூ இங்கிலாந்து (அமெரிக்கா), அக்டோபர்-18, பல ஆண்டுகளாக Johnson & Johnson புட்டாமாவு பயன்படுத்தியதால் அரிய வகைப் புற்றுநோய்க்கு ஆளானதாகக் கூறப்படும் அமெரிக்க ஆடவருக்கு, ஒன்றரை கோடி டாலர் இழப்பீடு வழங்க அந்நிறுவனம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மலேசிய ரிங்கிட்டுக்கு அது 6 கோடியே 46 லட்சம் வெள்ளிக்கு சமமாகும்.

Evan Plotkin எனும் அவ்வாடவருக்கு 2021-ல் புற்றுநோய் உறுதிச் செய்யப்பட்ட பிறகு, அவர் அவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.

குழந்தைகளுக்கான Johnson & Johnson புட்டாமாவை நுகர்ந்ததே புற்றுநோய்க்குக் காரணமென உறுதியானதாக நீதிமன்றத்திடம் Plotkin தெரிவித்திருந்த நிலையில், நீதிபதிகள் குழு அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இவ்வேளையில், அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக Johnson & Johnson நிறுவனம் அறிவித்துள்ளது.

“எங்களின் தயாரிப்பில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனப் பொருட்கள் எதுவுமில்லை என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டும், விசாரணையின் போது அதனை நீதிபதிகள் கருத்தில் கொள்ள தவறி விட்டனர்” என Johnson & Johnson கூறிக் கொண்டது.

அந்நிறுவனத்தின் talcum புட்டாமாவைப் பயன்படுத்தியதால் கர்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வந்ததாகக் கூறி 62,000-கும் மேற்பட்டோர் Johnson & Johnson நிறுவனத்திற்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தொடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!