
கோலாலம்பூர் – ஜூன்-8 – SPM தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்று, JPA எனப்படும் பொதுச் சேவைத் துறையின் கல்வி உபகாரச் சம்பளத்திற்கு நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்களா?
JPA-வின் நேர்முகத் தேர்வுக்குத் தயாராவதில் தடுமாற்றமா? கவலை வேண்டாம்!
உங்களுக்கு வழிகாட்டுவதற்காக Google Meet வாயிலாக ஜூன் 9, இரவு 8.30 மணிக்கு சிறப்பு நேரலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. CUMIG எனப்படும் இந்திய பட்டதாரிகள் அமைப்பின் ஆசிரியர் பணிக்குழுவைச் சேர்ந்த கோகிலவாணி அரிச்சனன் இதனை நெறியாளராக வழிநடத்துகிறார்.
இந்த நேரலையில், 2024-ல் JPA கல்வி உபகாரச் சம்பளம் பெற்று பிரான்ஸில் அரசியல், தத்துவவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் படித்து வரும் வர்ஷினி பிரதாபன் பங்கேற்கிறார்.
அவரோடு, 2021-ல் JPA கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற மலேசிய மோனாஷ் பல்கலைக்கழக மாணவி தாரணி பிரதாபனும் தனது அனுபவத்தையும் மாணவர்களுக்குப் பயனுள்ள குறிப்புகளையும் வழங்குவார்.
எனவே இந்த அரிய வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். JPA நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களோடு, நடப்பு மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.
ஆர்வமுள்ளோர் QR குறியீட்டை scan செய்து Google Meet link இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.