சைபர்ஜெயா, செப்டம்பர்-9, மின்சார வாகனங்கள் உள்ளிட்ட ZEV எனப்படும் பூஜ்ஜிய உழிம்வு வாகனங்களுக்கான (zero emission vechicles) சிறப்பு வாகனப் பதிவு எண் பட்டைகளை, அரசாங்கம் இன்று அறிமுகப்படுத்தியது.
அந்த JPJePlate எண் பட்டைகள் சில பல புதிய அம்சங்களுடன் வருகின்றன.
டோல் மற்றும் கார்நிறுத்துமிடக் கட்டணங்களுக்கு நடப்பிலுள்ள RFID ஸ்டிக்கர் முறைக்கு பதிலாக, உள்ளமைக்கப்பட்ட RFID சில்லும் அதிலடங்கும்.
வாகனங்களின் முன்பக்க மற்றும் பின்பக்க பட்டை உள்ளிட்டவற்றை அடக்கியுள்ள 1 செட் எண் பட்டை 98 ரிங்கிட்டுக்கு விற்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
என்றாலும், இந்த JPJePlate எண் பட்டைகள், புதிய ZEV வாகனங்களுக்கு மட்டுமே கட்டாயமாகும்; நடப்பு ZEV வாகனங்களுக்குக் கட்டாயமில்லை.
எனினும் ஆர்வமுள்ள உரிமையாளர்கள் அதற்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சொன்னார்.
வாகன உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள், ZEV வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சார்பில் இன்று முதல் JPJ இணையத் தளத்தில் JPJePlate எண் பட்டைகளுக்கு முன்பதிவுச் செய்யலாம்.
நடப்பிலுள்ள மின்சா வாகனங்களின் உரிமையாளர்கள், தற்போதைய எண் பட்டைகளையே தொடர்ந்து பயன்படுத்தவோ அல்லது நவம்பர் தொடங்கி புதியப் பட்டைகளுக்கு விண்ணப்பிக்கவோ தேர்வு வழங்கப்படுகிறது.