
கோலாலாம்பூர், ஏப்ரல்-15-கோலாலம்பூரின் அடையாளமான KLCC-யில் சுற்றுப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத புகைப்படக் கலைஞர்களுக்கு எதிராக DBKL அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்றையச் சோதனையில், அனுமதியின்றி புகைப்படச் சேவையில் ஈடுபட்டு வந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவர்களின் கேமராக்கள் மற்றும் பிற புகைப்பட உபகரணங்களையும் DBKL அமுலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுற்றுப் பயணிகளிடம் அத்துமீறி நடப்பது மற்றும் அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் வணிகம் செய்ய முறையான உரிமம் அவசியம் என்பதை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
மாநகரின் பாதுகாப்பையும், சுற்றுப் பயணிகளின் வசதியையும் உறுதிச் செய்ய இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என DBKL கூறியது.
சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



