Latest

MYFutureJobs பிரீமியம் கார்னிவல் 2026; ஏப்ரல் 25–26 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது

கோலாலம்பூர் , ஏப் 14 – MYFutureJobs பிரீமியம் கார்னிவல் 2026, KLCC எனப்படும் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும் PERKESO எனப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு , இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களை ஒன்றிணைத்து, வேலை தேடுபவர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான களத்தை திறக்கிறது என்று அறிவித்துள்ளது.

CIMB, HSBC, PwC, Lenovo, Denso, Sunway, Bank Islam, Media Prima, KPJ Healthcare, UOA Group, IJM Corporation, Berjaya Corporation, Tropicana Corporation, Tan Chong Group, Mah Sing மற்றும் Habib Group ஆகிய முன்னணி நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்களில் அடங்கும்.

மேலும், PNB Merdeka Ventures, BSN, MIMOS, PUSPAKOM, UMW, Alam Flora, Pharmaniaga, PTTEP, Hartalega, Boustead Properties மற்றும் Singtel போன்ற பிற நிறுவனங்களும் பங்கேற்கவிருக்கின்றன.

பங்கேற்பு நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்காக, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ MYFutureJobs இணையதளம் வழியாக முன்கூட்டியே பதிவு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!