Latestமலேசியா

KLIAவில் 2,500 ஆமைகள் கடத்த முயன்ற இந்திய பிரஜை; கொண்டுச் செல்ல மட்டுமே கூலி; உள்ளே என்ன என்பது தெரியாது

புத்ரா ஜெயா, ஆக 8 – KLIA அனைத்துலக விமான நிலையத்தில் சிவப்பு காதுகள் கொண்ட 2,500 Slider ஆமைகளுடன் இந்திய பிரஜை ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.

அவர் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்தார் என AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் KLIA Komander Ibrahim Mohd Yusof தெரிவித்தார்.

அந்த சந்தேக நபர் வனவிலங்கு கடத்தல் கும்பலின் முக்கிய கையாளாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

KLIA விமான நிலையத்தின் முதலாவது முனையம் வழியாக தனது பொருட்களை வெளியே எடுத்துச் செல்வதற்கு கடத்தல் கும்பலால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர் என்று சந்தேகிக்கப்பட்ட 41 வயதுடைய அந்த நபரை அதிகாரிகள் வெற்றிகரமாக கண்டுபிடித்து கைது செய்தனர்.

மேலும் தாம் வைத்திருந்த பேக்கில் இருக்கும் பொருட்களின் உள்ளடக்கங்கள் தனக்குத் தெரியாது என்பதோடு தனக்கான விமான டிக்கெட்டுகளை மூன்றாம் தரப்பினர் வாங்கித் தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

2023ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம்தேதி வெளிநாட்டு தொழிலாளியாக மலேசியாவில் நுழைந்த அந்த ஆடவர் நவம்பர் 28ஆம்தேதிவரை இன்னமும் செல்லுபடியாகும் வேலை அனுமதி பெர்மிட் வைத்திருப்பதும் குடிநுழைவு தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!