
செப்பாங், நவம்பர்-15, நேற்று KLIA Terminal 1 முனையத்தில், மோசமான மழையின் போது நீர் கசிந்த சம்பவத்திற்கு, குத்தகைக்காரரின் தவறே காரணம் என, மலேசிய விமான நிலைய நிறுவனமான MAHB கூறியுள்ளது.
கூரை பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், குத்தகைக்காரரின் செயல்முறை பிழையால் நீர் கால்வாய் வழியாக உள்ளே புகுந்தது.
இது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு என MAHB ஏமாற்றம் தெரிவித்தது.
கூரையின் வடிகால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததால், கன மழையில் நீர் தேங்கி பயணிகள் புறப்படும் மையத்தில் பரலாக ஒழுகியது.
இதையதடுத்து MAHB-யின் பொறியியல், செயல்பாட்டு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் அவ்விடத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு, சுமார் 90 நிமிடங்களுக்குள் நிலைமையை சரிசெய்தன.
இந்நிலையில், MAHB தற்போது மழை முன்னறிவிப்பு சோதனைகளையும் கடுமையான ஏற்பாடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று நீர் கசிந்த சம்பவம் வைரலாகி, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் உள்ளரங்கு நீரூற்றுடன் KLIA-வை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் மீம்ஸ் (memes) களும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



