Latest

‘Kuala Kedah’ பகுதியில் 3.06 மீட்டர் கடல் நீர் உயர்வு; வீடுகள் நீரில் மூழ்கிய பரிதாபம்

அலோர் ஸ்டார், நவம்பர் 6 – ‘Kuala Kedah’ மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், நேற்று நள்ளிரவுக்குப் பிறகு, கடல் நீர் உயர்வு ஏற்பட்டதால் (air pasang besar), சில வீடுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் தற்காலிகமாக நீரில் மூழ்கின.

பாதிக்கப்பட்ட இடங்களில், Kuala Kedah Feri நிலையம், தாமான் ஸ்ரீ புத்ரா, பசார் கோத்தா மரினா மற்றும் Pekan Kuala Kedah ஆகியவை உள்ளடங்குமென்று குடிமக்கள் பாதுகாப்புத் துறை (APM) அதிகாரி கேப்டன் (PA) அப்துல் ஹாலிக் ராஃபிக் மொக்தார் (Abdul Haliq Rafiq Mokhtar) தெரிவித்தார்.
.
இந்த பெரும் அலை சுமார் இரண்டு மணி நேரம் நீடித்ததைத் தொடர்ந்து கடல் நீர் 3.06 மீட்டர் உயரத்திற்கு எட்டியது. இதனால், கடல் நீர் மேலேறி பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

அச்சமயம் மழை மற்றும் காற்று சுழற்சி ஏதும் ஏற்படவில்லை என்றும், வெறும் கடல் நீர் உயர்வால் மட்டுமே இந்த வெள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் குறிப்பிட்ட நேரத்திற்குள் நீர் மெதுவாகக் குறைந்து, நிலைமை முழுமையாக சீராகியது என்று அப்துல் ஹாலிக் ராஃபிக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!