Latestமலேசியா

’Kuil haram’ எதிர்ப்புப் பேரணி: போலிஸ் சம்ரி வினோத்-தை இரு நாள் தடுத்து வைக்க அனுமதி

’Kuil haram’ எதிர்ப்புப் பேரணி: போலிஸ் சம்ரி வினோத்-தை இரு நாள் தடுத்து வைக்க அனுமதி

கோலாலாம்பூர், பிப்ரவரி-8,

சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக கோலாலாம்பூர் SOGO-வில் பேரணி நடத்த முயன்று தோல்விகண்ட, சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சாம்ரி வினோத் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படவுள்ளார்.

இணை ஏற்பாட்டாளரான தாமிம் டாஹ்ரி அப்துல் ரசாக்கையும் (Tamim Dahri Abdul Razak) விசாரணைக்குத் தடுத்து வைக்க நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கப்படும் என, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus தெரிவித்தார்.

இருவரும் தற்போது டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டம் , குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக, போலீஸாரின் தடையையும் மீறி நேற்றிரவு SOGO அருகே கூட முயன்றதன் பேரில் 4 பெண்கள் உட்பட மொத்தம் 19 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்களில் 17 பேர் வாக்குமூலம் அளித்த பின் விடுவிக்கப்பட்டனர்.

பேரணி தொடங்குவதற்கு முன்பே, 131 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கினர்.

இதனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது; என்றாலும் திட்டமிட்டபடி கூடுவோம் என சாம்ரி சவால் விட்ட நிலையில், அப்பேரணி ஆதரவில்லாமல் பிசுபிசுத்துப் போனது.
கின

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!