
குவாலா லங்காட், நவம்பர்-25 – LBS Bina Group Bhd-டின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளை மேற்பார்வையிடும் அமைப்பான LBS அறக்கட்டளை (LBSF), சிலாங்கூர், பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள குவாலா லங்காட் போலீஸ் தலைமையகத்துக்கு 2 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஒரு வணிகக் கடையை நன்கொடையாக வழங்கியுள்ளது.
சாவி ஒப்படைக்கும் நிகழ்வில் LBSF வாரிய அறங்காவலரும், LBS குழுமத்தின் நிர்வாகத் தலைவருமான Tan Sri Ir Dr Lim Hock San, சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் Mohd Zaini Abu Hassan, குவாலா லங்காட் போலீஸ் தலைமையகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்பங்களிப்பு, பொதுச் சேவை நிறுவனங்களை ஆதரிப்பதிலும் சமூக பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் LBSF-சின் கடப்பாட்டை புலப்படுத்துகிறது.
நன்கொடையாக வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளும் வணிகத் தளமும் சமூகத்திற்கு சேவை செய்யும் போலீஸாரின் செயல்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுமென Dr Lim தெரிவித்தார்.
LBS அறக்கட்டளையானது, 2015-ல் தொடங்கப்பட்டு, கல்வி, சமூக, சுற்றுச்சூழல், ஆரோக்கியம் என பல துறைகளில் பங்களித்து வருகிறது.
குறிப்பாக பல்வேறு தொண்டு மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்ட முயற்சிகள் மூலம் அரச மலேசியப் போலீஸ் படையைத் அது தொடர்ந்து ஆதரித்து வருகிறது.



