Latestமலேசியா

Lexult–RD Mystics கூட்டணி: தனியார் விமானம், ஆடம்பர சுற்றுலா சேவைகளின் புதிய யுகம்

Lexult–RD Mystics கூட்டணி: தனியார் விமானம், ஆடம்பர சுற்றுலா சேவைகளின் புதிய யுகம்

கோலாலம்பூர், பிப்ரவரி-7,

Lexult குழுமம், அதன் துணை நிறுவனமான Black Cat Smart Force Sdn Bhd வழியாக, Bentara குழுமத்தின் RD Mystic Global Travel & Events Sdn Bhd நிறுவனத்துடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Lexult குழுமத்தின் தலைமை செயலதிகாரி Dato’ Dr. Christopher Jacob, Black Cat Smart Force நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு தலைமை செயலதிகாரி கணிஷ் பிரசாத், RD Mystics Global நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குநர் R.D. மேனன், நிர்வாகப் பங்காளியான பிரமி உள்ளிட்டோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

டிசம்பர் 18-ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தம், தனியார் விமான சேவைகள், பாதுகாப்பு, மற்றும் ஆடம்பர சுற்றுலா சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் புதிய முயற்சியாகும்.

உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் சொகுசு பயண வழங்குநரான Lexult குழுமம், தனிப்பட்ட முறையில் 18 தனியார் ஜெட் விமானங்களை சொந்தமாகக் கொண்டுள்ளது.

தவிர உலகெங்கும் உள்ள பெரும்புள்ளி வாடிக்கையாளர்களுக்கு தனியார் ஜெட் சேவைகள், மருத்துவ விமான அம்புலன்ஸ் சேவைகள், சரக்கு ஜெட் சேவைகள், ஜெட் குத்தகை மற்றும் VIP-களுக்கான விமான நிலைய கையாளுதல் ஆகியவற்றை வழங்குகிறது.

அதேசமயம், RD Mystic தரை போக்குவரத்து, சுற்றுலா, மற்றும் நிகழ்ச்சி நிர்வாகத்தை கவனித்து தடையற்ற _end-to-end_ பிரீமியம் பயண அனுபவத்தை வழங்கும்.

இந்த ஒத்துழைப்பானது, VIP பயணங்கள், மருத்துவ அவசர விமான சேவைகள், தூதரக பணிகள், ஆடம்பர சுற்றுலா, மற்றும் உயர்மதிப்புள்ள சரக்கு போக்குவரத்துக்கு ஆதரவாக இருக்கும்.

_”இது மலேசியாவை உலகளாவிய ஆடம்பர விமான, சுற்றுலா துறையில் முன்னணி நிலைக்கு கொண்டு செல்லும் முக்கியமான படியாகும்”_ என இரு நிறுவனங்களும் வருணித்தன.

இவ்வொத்துழைப்பின் வாயிலாக Lexult மற்றும் RD Mystic நிறுவனங்கள் ஆடம்பர பயணத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!