Latestமலேசியா

LGBT சாதாரணமாக்கலைத் தவிர்க்க ‘budaya songsang’ சொல்லைப் பயன்படுத்துங்கள் – துணையமைச்சர் மர்ஹாமா ரோஸ்லி வலியுறுத்து

கோலாலம்பூர், பிப்ரவரி-26-ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலினம் மாறியவர்கள் உள்ளிட்டோரைக் குறிக்கும் LGBT சமூகத்தை இனி ‘budaya songsang’ அதாவது ‘முறைத் தவறிய கலாச்சாரம்’ என்று அழைக்குமாறு, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான துணையமைச்சர் Marhamah Rosli பரிந்துரைத்துள்ளார்.

LGBT என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதால் சமூக ஊடகங்களில் அந்தக் கருத்துகளை _algorithm_ மூலம் நாமே அதிகரிக்கச் செய்து விடுகிறோம்; இதனால், அறியாமலேயே இக்கலாச்சாரத்தை நாம் சாதாரணமாக்கல் செய்து விடும் அபாயம் உள்ளது.

எனவே, அந்தக் கலாச்சாரத்தை மறைமுகமாக பிரச்சாரம் செய்வதைத் தவிர்க்க இந்த பரிந்துரையை முன்வைப்பதாக இன்று மேலவையில் அவர் கூறினார்.

அண்மையில் சர்ச்சையான ‘Glamping with Pride’ போன்ற LGBT நிகழ்ச்சிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும், அக்கலாச்சாரத்திலிருந்து மக்களை மீட்பதற்காக சமய போதனை மற்றும் வழிகாட்டல் குறித்தும் கேட்கப் பட்ட கேள்விக்கு துணையமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.

அதே சமயம், JAKIM மற்றும் MCMC போன்ற அதிகாரத் தரப்புகள் இணைந்து இத்தகைய LGBT உள்ளடக்கங்களை கண்காணித்து, சட்டத்திற்கும் மத மதிப்புகளுக்கும் முரணான பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!