
குவாலா திரங்கானு, நவம்பர்-7 – உலு திரங்கானு, தெலமோங் அருகேயுள்ள இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையின் (LPT2) 406-வது கிலோ மீட்டரில் வாகனத்தால் மோதப்பட்டு ஆண் சூரியக் கரடி பலியானது.
நேற்று காலை 8 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், தலையில் படுகாயமடைந்ததால் 60 கிலோ கிராம் எடையிலான அந்த காட்டு விலங்கு மரணமடைந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த வனவிலங்குப் பாதுகாப்புத் துறையினர், இறந்துபோன கரடியை நெடுஞ்சாலையிலிருந்து அப்புறப்படுத்தி அருகிலுள்ள நிலத்தில் புதைத்தனர்.
இவ்வேளையில், கடந்த ஞாயிறன்று அதே LPT2 நெடுஞ்சாலையின் 422-வது கிலோ மீட்டரில் வாகனத்தால் மோதப்பட்டு வலியால் சாலையில் உருண்டு துடித்த மற்றொரு சூரியக் கரடி என்னவானது என்பது இன்னும் தெரியவில்லை.
இதுவரை தங்கள் கண்ணில் அது சிக்கவில்லை என திரங்கானு வனவிலங்குத் துறை கூறியது.