
LRT3 திறப்பு விரைவுபடுத்தப்படுகிறது; அந்தோணி லோக் அறிவிப்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-15,
LRT3 இரயில் செயல்பாட்டை விரைவாகத் தொடக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது.
இது, ஷா ஆலாம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளை இணைத்து கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
சேவையைத் தொடங்கும் முன் சில கட்டாயச் சோதனைகள் உள்ளன; அவற்றை முடித்த பின்னர் வரும் மாதங்களில் பொது மக்களுக்கு சேவை தொடங்கப்படும் என்றார் அவர்.
இந்த LRT3 திட்டம் மக்களுக்கு அதிக பொது போக்குவரத்து தேர்வுகளை வழங்கும் நோக்கத்தைக் கொண்டது.
ஆனால், சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, நெரிசலைக் குறைக்கும் முயற்சிக்கு பெரும் சவாலாக உள்ளதாக அவர் சொன்னார்.
கடந்தாண்டு மட்டும் நாட்டில் 820,000 வாகனங்கள் விற்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.



