
கோலாலம்பூர், செப்டம்பர்-17,
நாடு முழுவதும் இதுவரை 2,257 தொழில் முனைவோர், MUM எனப்படும் Maju Usahawan MADANI 2025 திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.
அவர்களில் 1,674 பேர் பெண்கள் ஆவர்; அவர்களின் பங்கேற்பு, ஆண்களை விட 3 மடங்கு அதிகமாக உள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அதிக ஆண்கள் பங்கேற்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தத் திட்டம், தொழில் வளர்ச்சிக்கான செலவுக் குறைப்பு யுக்திகள், டிஜிட்டல் உருமாற்றம், AI அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடு போன்றவற்றை கற்றுக்கொடுக்கிறது.
மேலும், கடன் நிர்வகிப்பு, e-Invois மற்றும் ESG நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வையும் வழங்குகிறது.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், அத்தொகுதியில் MUM பயிற்சித் திட்டத்தை நிறைவுச் செய்து, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வில் அவ்வாறு கூறினார்.
SME வங்கியின் துணை நிறுவனமான CEDAR, இவ்வாண்டில் 3,000 தொழில் முனைவோர்கள் இந்த MUM திட்டத்தில் பங்கேற்பதை இலக்காகக் கொண்டுள்ளது.