Latestமலேசியா

Masjid Kristal பள்ளிவாசல் உண்டியல் திருட்டு; 17 வயது பையன் உட்பட 4 பேர் கைது

ஷா ஆலாம், பிப்ரவரி-26-ஷா ஆலாம், செக்ஷன் 7-ல் உள்ள Masjid Kristal பள்ளிவாசலில் உண்டியல் திருடிய சந்தேகத்தில் 4 ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.

பிப்ரவரி 22 மற்றும் 24 -காம் தேதிகளில் கிள்ளான் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட சோதனைகளில் அந்நால்வரும் பிடிபட்டதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar தெரிவித்தார்.

17 முதல் 26 வயதுக்குட்பட்ட அந்நால்வரும் ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டவர்கள் ஆவர்; அவர்களில் ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிச் செய்யப்பட்டது.

ஒரு Toyota Avanza கார், 4 கைப்பேசிகள், 200 ரிங்கிட் ரொக்கப் பணம் ஆகியவற்றையும் போலீஸ் பறிமுதல் செய்தது.

பிப்ரவரி 22-ஆம் தேதி உண்டிய திருடு போன இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து போலீஸ் விசாரணையில் இறங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!