Latestமலேசியா

MH370: 12 ஆண்டுகள் ஆனாலும் சுவடில்லை; குடும்பங்களுக்கு தகவல் தர அரசாங்கம் உறுதி

கோலாலாம்பூர், மார்ச்-8 – MH370 விமானம் மாயமாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கும் கடப்பாட்டை போக்குவரத்து அமைச்சு மறு உறுதிப்படுத்தியுள்ளது.

‘விமானம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கட்டணம்’ என்ற ஒப்பந்தத்தின் பேரில் கடல் ரோபோடிக்ஸ் நிறுவனமான Ocean Infinity தென் இந்தியப் பெருங்கடலில் கடந்த 28 நாட்களாக புதியத் தேடலை மேற்கொண்டது.

ஆனால், விமானத்தின் சுவடுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், அமைச்சின் விமான விபத்து விசாரணை பிரிவு, மலேசியா வெளிப்படைத்தன்மையை காக்கும் என்றும், குடும்பங்களுக்கு ஆகக் கடைசித் தகவல்களை தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு இதே மார்ச் 8-ஆம் தேதி கோலாலாம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் புறப்பட்ட போது, 239 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் இந்த MH370 விமானம் காணாமல் போனது.

உலக வான் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகப் பெரிய மர்மமாக இது நீடிக்கும் நிலையில், இந்த12-ஆம் ஆண்டிலாவது விடைக் கிடைக்காதா என 239 பயணிகள் மற்றும் குழுவினரின் குடும்பங்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.

அதிகாரிகளும், உண்மையை வெளிக்கொணர முயற்சிகள் தொடரும் என உறுதியளித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!