
புக்கிட் ஜாலில் , பிப்ரவரி-27-இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சான KBS, தேசிய விளையாட்டு மன்றமான MSN-னுடன் இணைந்து இன்று MyAthlete Centre-ரை அறிமுகப்படுத்தியது.
அமைச்சர் Dr மொஹமட் தவ்ஃபிக் ஜொஹாரி அதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இது, தேசிய விளையாட்டு வீரர்களுக்காக மலேசியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட முழுமையான நலன் மையமாகும்.
இங்கு வீரர்கள் ஓய்வெடுத்து, மன அழுத்தத்தை குறைத்து, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் நலன் தொடர்பான ஆலோசனைகளைப் பெற முடியும்.முக்கியமாக, இந்த மையம் வீரர்களால், வீரர்களுக்காக இயக்கப்படும்… அவர்கள் பகுதிநேர பணியாளர்களாகவும் செயல்படுவார்கள்.

குறிப்பாக, இவ்வாண்டு மலேசியா காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் பாரா ஆசிய விளையாட்டுகள் ஆகிய மூன்று பெரிய போட்டிகளில் பங்கேற்பதால், இந்த மையம் வீரர்களின் மனநலம் மற்றும் நலனைக் காக்க உதவுமென ஜொஹாரி நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த முயற்சி வெற்றியடைந்தால், அரசாங்கம் மேலுமிரண்டு மையங்களை உருவாக்கும் திட்டத்தையும் பரிசீலிக்கும் என்றார் அவர்.



